



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது
இத்திருக்கோயில் அருகே மணிமுத்தா நதிக்கரை உள்ளது இந்த மணிமுத்தா நதியில் நீராடி விருத்தகீஸ்வரர் வணங்கினால் காசிக்கு சென்ற பலன் உள்ளது அதனால் இக்கோவிலுக்கு காசியை விட வீசம் அதிகம் என்பர்.அப்படிப்பட்ட திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு சாமி பல்லக்கில் வீதி உலா வந்தடைந்தனர். இந்த நிலையில் கடந்த 8- ம் தேதி 6 ஆம் திருவிழா இத்திருக்கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா நடைபெற்றது.11-ம் தேதி 9- ம் நாள் திருவிழா தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில் 12-ம் தேதி 10- ம் திருவிழா மாசி மகம் திருவிழா நடைபெற்றது இதில் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு மணிமுத்தாற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.

11- ம் நாள் திருவிழா 13-ம் தேதி தெப்பத் திருவிழா முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இரவு சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து பின்னர் பாலக்கரையில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

