• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு..!

Byவிஷா

Nov 7, 2023

சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 03.00 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடையவுள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் கூடுதலாக காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மாநில காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் என சுமார் 60,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் நவம்பர் 17- ஆம் தேதி இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.