மன்னர் மாவேலியை போன்று பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள். புன்னகை முகத்துடன் மக்கள் கடலை கடந்த பிரியங்கா காந்தி.
கேரள மக்கள் இயல்பாகவே மன்னர் மீது பாசமும்,மரியாதையும் கொண்டவர்கள். ஓணம் திருவிழா என்பது மன்னர் மாவேலி தன் நாட்டு மக்களை ஓணம் பண்டிகை நாளில் நேரில் காண வருகிறார். 10_ நாள் கொண்டாட்டம் நடத்தி மகிழ்விப்பது. மன்னர் ஆட்சி போய் மக்கள் ஆட்சியிலும் கேரள மக்கள் மன்னன் மாவேலி மீது வைத்திருக்கும் உயர்ந்த மதிப்பின் அடையாளம்.
ஒட்டுமொத்த கேரள மக்களும் வயநாடு பகுதியில் வந்து கடல் போல் குவிந்து விட்டார்களோ என எண்ணும் நிலையில், பிரியங்கா காந்தியை மன்னன் மாவேலியை ஓணத்திருநாளில் எத்தகைய உற்சாகத்தில் வரவேற்பாளர்களோ அதே உற்சாகத்தில். பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரை கூடியிருந்த மக்கள் உற்சாக மிகுதியில் அண்ணன் ராகுல் காந்திக்கும், தங்கை பிரியங்கா-விற்கும் சாலைகளின் ஓரத்தில் இருந்தும் சாலைகளில் இடைவெளியே இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டமாக. மரங்களின் மேல் அமர்ந்தும், உயர்ந்த கட்டிடங்களின் மேல் இருந்தும். வயநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தாயே நீதான் என் உறத்த குரலில் வாழ்த்துகளை தெரிவித்து “கை”அசைத்து வாழ்த்து தெரிவித்த உற்சாகம் மிகுதியை ரோடு ஷோ வில் காணமுடிந்தது. ஊர்வலம் முழுவதும் உயர்த்தி பிடித்த காங்கிரஸ் கொடிகள். முன்று வண்ணத்தில் ஆன பலூன்கள் கோபுரம் வடிவில் உயர்த்தி பிடித்தம் படி செல்லும் ஆண்கள்,பெண்கள் கூட்டம். பாதுகாப்பு பணியில் காவலர்கள் இருந்தும். நாங்கள் கட்டுப் பாட்டு நிறைந்த மக்களின் ஊர்வலம் என்பதை வயநாடு மக்கள் அவர்களது செயலில் காண்பித்தார்கள்.
கேரள காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளர் பிரியங்கா காந்தியுடன் வீடு, வீடாக இன்றே வாக்கு சேகரிப்பில் இறங்கி விட்டார்கள். பிரியங்கா காந்தி வாக்கு கேட்டு சென்ற வீடுகளில் வயது முதிர்ந்த பெண்கள் அவர்களது பேத்தியை எப்படி உச்சி முகர்ந்து,கட்டி அணைத்து வரவேற்பாளர்களோ, அப்படி பிரியங்கா காந்தியை வரவேற்றனர்.
வயநாடு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடும் மன்னன் மாவேலியை அத்திப்பூ கோலம் இட்டு வரவேற்பை போன்ற மற்றொரு காட்சியாக. ஒவ்வொரு வீட்டிலும் வாக்காளர் அதிலும் குறிப்பாக பெண்கள் அவர்கள் வீட்டிற்கு பிரியங்கா வருவதை பார்த்து காத்திருப்பதை முதல் நாளான இன்று (அக்டோபர்_23) தேதியே காணமுடிந்தது.
இன்று முதல் பத்து நாட்கள் பிரியங்கா காந்தி தொகுதி முழுவதும் ஆதரவு கேட்டு வீடு, வீடாக,வீதி ஊர்வலம்,சாலை சந்திப்பு கூட்டம்,பொதுக்கூட்டம் என வயநாடு தொகுதியில் பத்து நாட்களுக்கு நடக்கப்போவது “காங்கிரஸ் திருவிழா” பத்தாம் நாள் தேரோட்டம். ஊர் கூடி தேர் இழுப்பது போல் வயநாடு வாக்காளர்கள் வாக்கு சாவடிகளில் பிரியங்கா காந்திக்கு வாக்களிக்க போகிறார்கள்.
வயநாடு வாக்காளர்கள் காத்திருப்பது. பிரியங்கா காந்தி எத்தனை “லட்சம் வாக்குகள்” வித்தியாச்தை தொடப்போகிறார் என்பதை தான்.