• Sat. Feb 15th, 2025

மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி

Byகுமார்

Apr 8, 2024

மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், விவசாயிகள், காய்கறிகள் விற்பனை செய்வோர், பொதுமக்கள் என அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் விவசாயிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு. தருண் குமார், இ.வ.ப., அவர்கள், வேளாண்மை துறை இணை இயக்குனர் திரு.சுப்புராஜா அவர்கள், மாநகராட்சி உதவி ஆணையர் ஜி.கோபு அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.