• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி..

Byகாயத்ரி

Mar 3, 2022

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2021- 22- ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி ,25ஆம் தேதி முடிய உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி முடிய உள்ளது. இதற்கிடையில் 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும்.

இவ்வாறு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தந்தார். இந்நிலையில் புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறுகிறது. எனினும் இந்த தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது, கட்டாயம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளது.