வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், குருபூஜை விழாவாக ஓட்டப்பிடாரத்தில் கொண்டாடப்பட உள்ளதாக, ‘ஐம்பா’ அமைப்பின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.,யின் 89வது நினைவு நாள், நவம்பர் 18ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்நாளை ஒட்டி, அவர் பிறந்த ஓட்டப்பிடாரத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பு (ஐம்பா) சார்பில் குருபூஜை விழாவாக நடத்தப்பட உள்ளது. பாஞ்சாலங்குறிச்சி சாலையில் உள்ள மைதானத்தில் இந்த விழா நடககிறது.

குருபூஜை நிகழ்வுக்கான பூமி பூஜை, மாநாடு பந்தல் கால்கோள் விழா நேற்று நடந்தது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் (ஐம்பா) தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். மண்டல செயலாளர்கள் முத்தையா, பாக்கியநாதன், மாவட்ட தலைவர்கள் பூதலிங்கம், லட்சுமணன், இளைஞரணி மகேஷ் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மதுரை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து அணையா ஜோதி ஊர்வலம் கிளம்புகிறது. வ.உ.சி, நினைவு நாளன்று, ஓட்டப்பிடாரத்தில் அவர் பிறந்த நினைவிடத்திற்கு ஜோதி ஊர்வலமாகக் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. அப்போது, 10 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் முளைப்பாரி, வள்ளி கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)