• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க மறுப்பு…

Byகாயத்ரி

Sep 28, 2022

நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருக்கும் அவரை பார்வையாளர்கள் சந்திக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.