மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்ம சமூக கூட்டமைப்பு சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அமைந்துள்ள திருமண மாளிகையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்ம சமூக கூட்டமைப்பு சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் M.தங்கராஜ் தலைமை தாங்கினார் மாநிலப் பொருளாளர் S.V.K.ஆறுமுகம், மதுரை மாவட்டத் தலைவர் D.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு ஶ்ரீலஸ்ரீ.பாபுஜி சுவாமிகள்,புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமிஅதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விஸ்வகர்ம கூட்டமைப்பின் சார்பில்பாபுஜி சுவாமிகளுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா மக்களின் புரட்சி நாயகன் விருதும். டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இந்து மதக் காவலன் விருதும், அதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜுக்கு தமிழகத்தின் சரித்திர நாயகன் விருதும் டாக்டர் பி எஸ் நாதனின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுவபடத்தினை திறந்து வைத்து சிறந்த மருத்துவர்நாயகன் விருது வழங்கப்பட்டது இவ்விருதினை அவரது உறவினர் விஸ்வரூபன் பெற்றுக்கொண்டார். மேலும் இவ்விழாவில் விஸ்வகர்மா மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்ம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.