• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்: பதற்றமான வாக்குசாவடிகளில் போலீஸ் குவிப்பு

ByBala

Apr 18, 2024

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் பதற்றமான 188 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 7,33,217 ஆண் வாக்காளர்கள், 7,68,520 பெண் வாக்காளர்கள், 205 3ம் பாலினத்தவர் என மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். நட்சத்திர வேட்பாளர்களை கொண்ட தொகுதியாக பார்க்கப்படும் இங்கு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த2பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். மொத்தம் 4066 வாக்குபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் (வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 188 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. 2 ஆயிரம் துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.