• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைரலாகும்கீர்த்திசுரேஷ் உடற்பயிற்சி

Byதன பாலன்

Feb 13, 2023

தற்போது தமிழில், மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதையடுத்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது காதல், திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது அவை எல்லாம் தவறான தகவல் தனது மகள் யாரையும் காதலிக்கவில்லை ஊடகங்களின் செய்தி பசிக்கு எங்களை பயன்படுத்த வேண்டாம் என நடிகைகீர்த்தி சுரேஷ் தயார் மறுப்பு தெரிவித்திருந்தார் இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ்புல்வெளியில் அனிமல் ப்ளோ என்ற வகை ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.வழக்கத்திலிருந்து மாறுபட்ட இந்த ஒர்க்கவுட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இயற்கையோடு ஒன்றி முதல் முறையாக இந்த அனிமல் ப்ளோ உடற்பயிற்சியை வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறேன் என்றும், பதிவிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் இதன் மூலம் அவர் பற்றிய வதந்திகள் பின்னுக்கு தள்ளப்பட்டு அவரது உடற்பயிற்சி செய்தி சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது