பக்தர்கள் நன்கொடையால் கட்டப்பட்ட கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அரக்காசனஹள்ளி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. அதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 100 குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்களிப்புடன் பெருமாள் சுவாமி கோவில் 2021 லவ் தொடங்கி கட்டப்பட்டது. கோவில் நிலம் தனிநபர் ஒருவரின் பட்டா நிலத்தில் உள்ளது. அதில் பட்டதாரரின் வாரிசுகளுக்கு நிலம் பிரிக்கப்பட்ட பின் நில உரிமையாளர் கோவிலுக்கு தானமாக வழங்க முன்வந்தார். இருப்பினும் அவரின் சகோதரர்கள் கோவிலுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவில் மற்றும் அதன் நிலம் தங்களுடைய சொத்து அதனை யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று தலைமுறைகளாக வழிபட்டு வந்த கோவில் புனரமைப்பு செய்த பின், தனி நபர்கள் ஆக்கிரமிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து ஊர் மக்கள் பயன்படுத்திக் கொண்டுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.




