• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட கிராம பொதுமக்கள் சாலை மறியல்…

ByKalamegam Viswanathan

Dec 16, 2023

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஐயப்ப பக்தர்களால் ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு வருடம் தோறும் பஜனைகள் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தினசரி இந்த கோவிலில் பஜனை செய்து பூஜைகள் செய்து வருகின்றனர் கிராமத்தில் ஒரு சிலருடைய புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் இந்த கோவில் கட்டி இருந்த இடத்தை காலி செய்ய சொல்லி விளம்பர போடு உசிலம்பட்டி கோட்டாட்சியர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது இதை கண்டித்து இன்று காலை விக்கிரமங்கலம் மதுரை செல்லும் சந்திப்பு ரோட்டில் நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துடன் பொதுமக்களும் சேர்ந்து 2000-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர் இதில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி செல்வம் ஐயப்ப பக்த குருநாதர்கள் உட்பட 200 பேர் இந்த மறியலில் ஈடுபட்டனர் காலையிலிருந்து இதுவரை மறியலில் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.