• Fri. Apr 26th, 2024

தேர்வாணையம் மூலம் கிராம ஊராட்சி செயலாளர்களை தேர்வு செய்ய வேண்டும்

தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலாளர்களை பிற மாநிலங்களில் உள்ளது போன்று தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த சங்கத்தின் மாநில ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறும்போது ” இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊராட்சி மன்ற செயலாளர்களை தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் மட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றி தமிழக முதல்வர் ஊராட்சி மன்ற செயலாளர்களை மாநில பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 செயலாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றம் செய்ய வேண்டும் வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *