விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சல்வார்பட்டி பஞ்சாயத்து 79வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ஸ்டீபன் ஏற்பாட்டில் நடைபெற்றது .

சிறப்பு அதிகாரி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி மற்றும் கிராம அதிகாரிகள் கலந்துகொண்டு சல்வார்பட்டி, இரவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், அச்சங்குளம், உள்ளடக்கிய பஞ்சாயத்து நாலு கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இரவார்பட்டி மக்கள் இரவாரப்பட்டியில் 25 வருடங்களுக்கு மேலாக வைப்பாறு பாலம் சேதம் அடைந்துள்ளது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கூடிய விரைவில் புதுபாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சல்வார்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீருக்கு சவுக் மற்றஒடை பகுதியில் குடிநீர் கிணறு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.