இந்தியாவின் 77_வது சுதந்திர தின விழாவில் குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட நவீன்குமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் குமரி R முருகேசன், மாநில செயலாளர் சினிவாசன், மாவட்ட துணைத் தலைவர் மகேஷ்லாசர், மாமன்ற உறுப்பினர்கள் அனுஷாபிரைட், செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் பிரவீன் உட்பட காங்கிரஸ் பேரியக்க மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகளும் வார்டு உறுப்பினர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்திய சுதந்திர கொடியை ஏற்றிய பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கி ஒருவர், மற்றொருவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றினார்…
