• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டி

ByG.Suresh

Mar 14, 2024

வணிகர்கள் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், தமிழக அரசு வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

சிவகங்கை தனியார் மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட வன்னிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பால குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கம ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, ரவுடிகள் வணிகர்களை மிரட்டி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் வரும் மே 5-ம் தேதி மதுரையில் நடைபெறும் வணிகர் சங்க மாநில மாநாட்டில் வணிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஏற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார். எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் வணிககளின் நலனுக்காக போராடி வேண்டி உள்ளதாக வேதனை தெரிவித்தவர், புகையிலை குட்கா பொருட்களுக்கு தடை விதித்ததை ஆதரிப்பதாகவும், ஆனால் அதிகாரிகள் வணிகர்களை மிரட்டி அதிக பணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டினார் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே வரி என்று கூறியவர் தற்போது 5 விதமான வரியினை மத்திய அரசு விதித்து வருவதாகவும், இதனால் அரசு அதிகாரிகளின் கெடுபிடி அதிகரித்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தடை செய்யப்பட்ட பொருட்களைஉற்பத்தி செய்பவர்களை விட்டுவிட்டு விற்பனை செய்பவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைப்பது தவறு. தவறு செய்யும் உற்பத்தியாளர்களை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. இதில் உள்நோக்கம் இருக்கிறது என்றார். மேலும் மத்திய அரசு சட்டம் ஏற்றும் போது வணிகர்களை பாதுகாக்க கூடிய வகையில் இருக்க வேண்டும், ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக வணிகளிடையே பேச்சு எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களது ஆதரவு யாருக்கு என்பதனை ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்து தெரியப்படுத்துவோம் என விக்கமராஜா தெரிவித்தார்.