தமிழ்நாடு அரசு சுமார் 1.15கோடி மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்திட்டமாக மாதம் ரூ 1000. வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெறும் இல்லதரசி மகளிர்களை இழிவுவாக பேசிய பாஜகவின் நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த் தலைமை தாங்கினார்.
மானாமதுரை எம் எல் ஏ தமிழரசி ரவிக்குமார் திமுக மகளிர் அணி கலந்துகொண்டு நடிகை குஷ்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்கும் முயற்சித்த போது சிவகங்கை நகர் காவல் துறையினர் மகளிர் அணி நிர்வாகிகளிடம் இருந்து உருவப் பொம்மையை மீட்டு அப்புறப்படுத்தினர் அப்பொழுது குஷ்புவின் புகைப்படத்தை எரிக்க முயற்சித்தனர்.