• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரியில் 2000டூவீலரில் அணிவகுப்பு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்வசந்த்

கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய்வசந்த் 18_வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலின் கடைசி நொடி தேர்தல் பிரச்சாரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அன்னை இந்திரா காந்தி சிலை முன் இருந்து.2000- இருசக்கர வாகனங்கள் அணி வகுக்க, நான்கு சக்கர வாகனங்கள் பின் தொடர, திறந்த வாகனத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உடன் பயணிக்க 18-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் வடசேரி அண்ணா சிலை முன்பு விஜய் வசந்த் நிறைவு செய்தார். இதைப் போன்று பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்,புத்தேரி மேம்பாலத்தில் தொடங்கி நாகர்கோவில் மணி மோடையிலும். அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேயன் செட்டிக்குளத்தில் தொடங்கி, நாகர்கோவில் நகர பூங்காவின் முன் நிறைவு பெற்றது.

கடந்த 15-நாட்களாக விடாது தொடர்ந்த ஒலி பெருக்கி ஓசை இன்று மாலை (ஏப்ரல்-17)ம் தேதி மாலை 6-மணிக்கு முற்றுப்புள்ளியானது.