• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டும் விஜய்வசந்த்

இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவுக்கு, இன்னும் விரல்விட்டு எண்ணும் நாட்களே உள்ளன.

காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வரும் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் உட்பட இந்திய கூட்டணி கட்சிகளின் பல்வேறு பொறுப்பாளர்கள் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து விஜய்வசந்த் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதுடன், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அதில் மீனவர்களின் நலம் காக்கும் திட்டம். தகுதி உடைய ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ரூ.8500 உதவி தொகையை காங்கிரஸ் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்ததும் என்பதை, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மீனவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.