கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பேச்சிப்பாறை மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அவரது வாகனத்தை தானே ஓட்டிச் சென்று குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமமான கோதையார், குற்றியார், தச்சமலை, தோட்டமலை பகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யவும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினையான சாலையின் நிலையை நேரில் ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களின் துயரை அறிய தானே அனைத்து மலை கிராமங்களுக்கும் அவரது வாகனத்தை அவரே ஓட்டி ஆய்வு செய்தும் மக்களின் கோரிக்கையை பெற்றுக்கொண்டார்.

விஜய் வசந்தின் செயலால் ஒட்டுமொத்த காணியின மக்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர். காணியின மக்கள் குறை கேட்பு சுற்றுப்பயணத்தின் போது: காணியின மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். 0 பாய்ண்ட் முதல் குற்றியார் வரையிலான சாலைகள் சீர் செய்யாமல் உள்ளதால் எங்கள் பகுதிக்கு பேருந்துகள் சரியாக வராத காரணத்தால் எங்கள் குழந்தைகள் படிப்பு கேள்விகுறியாக உள்ளது. நாகர்கோவில் இருந்து வரும் 313, 313 இ., பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களுக்கு செல்ல மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குரங்குகள் இங்குள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போது வீட்டின் ஒடுகளை உடைந்து வீட்டிற்குள் சென்று அனைத்து பொருள்களையும் சேதப்படுத்தி வருகின்றது. அதற்கு ஒரு தீர்வு காண ஓடு வீடுகளை அகற்றி தகர கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றியார் குடியிருப்பில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்கள் சேதமடைந்து உள்ளது அதனை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றியார் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பல வருடங்கள் ஆகியும் இது வரை பணிகொடைகள் வழங்கப்படாமல் உள்ளது, குற்றியார் பகுதியில் 100- நாள் பணிகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. இங்குள்ள கிராமங்கள் இன்னும் மின்சார வசதி இல்லாமல் இருக்கிறது, சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நிறைய வீடுகள் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. மேலும் குற்றியார் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள சமையல் செய்யும் இடத்திற்கு இது வரை மின்சாரம் கொடுக்கப்படவில்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என விஜய் வசந்த் எம். பி-யிடம் தெரிவித்தனர். குற்றியார் பகுதியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரண்டு வாலிபால், கிரிக்கெட் பேட், கேரம்போடு கோரிக்கை வைக்கப்பட்டது. தனது சொந்த செலவில் வாங்கி தருவதாக தெரிவித்தார்.
