
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் உணவுகள் வழங்கியும் தவெகவினர் கொண்டாடி வரும் நிலையில் நாகையில் 51 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய நிகழ்வு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் புத்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தவெகவை சேர்ந்த
எஸ்.கே.ஜி.சேகர் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 51 நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
