முன்னாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அமரர் பொன்னப்ப நாடார் நினைவு நூலகம் கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு – விஜய் வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், குமரி கோமேதகம் என போற்றப்படும் அமரர் பொன்னப்ப நாடார் அவர்களின் 49- வது ஆண்டு நினைவை போற்றும் விதமாக, பொன்னப்ப நாடார் அவர்களின் குடும்பத்தார் அரசுக்கு வழங்கிய இடத்தில் நினைவு நூலகம் அமைக்க வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20- லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கருங்கலை அடுத்த பாலவிளையில் உள்ள பொன்னப்ப நாடார் அவர்களின் நினைவிடம் அருகாமையில் வைத்து நடைபெற்றது. அவரது சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கலை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

முன்னதாக கருங்கல் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற மன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் பொன்னப்ப நாடார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய ராகவன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர். பினுலால் சிங், மாநில துணைத்தலைவர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், ஆஸ்கர்பிரடி, பொதுகுழு உறுப்பினர் பால்மணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி லைலா, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன், மற்றும் பொன்னப்ப நாடார் குடும்ப உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி செய்திருந்தார்.