• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில் முற்றத்திலிருந்து முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் வசந்த்.

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்திற்கான முதல் வாக்குப்பதிவு. இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் திங்கள் 19-ம் நாள் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று காலை, குமரி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணு மாலைய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். சுசீந்திரம் பகுதியில் வாழ்த்தி முதல் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார்கள். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மார்க்ஸிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, குமரி மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் தாமஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தின் முதல் வாகன பிரச்சார பயணத்தில் ஏராளமான பெண்கள் வேட்பாளர் விஜய் வசந்திற்கு வெற்றி திலகம் இட்டு அவர்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.