குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம். பி யிடம் கோரிக்கை வைத்தனர்,

கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 19.50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டிட பணி முடிவடைந்ததை முன்னிட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக திறப்பு விழாவுக்கு வருகை தந்த விஜய்வசந்த் எம்பி அவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், வட்டார தலைவர்கள் சாம் சுரேஷ் குமார், முன்னாள் வட்டாரத் தலைவர் கால பெருமாள், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் விஜயன், குறமகள், பிரபா, செல்வராஜ், பிரேம், மற்றும் நிர்வாகிகள் பேராசிரியர் முருகேசன், குணசேகர், சீதாராமன், ஹரிகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.






