• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இந்துத்துவா சக்திகளை ஓரங்கட்ட இந்தியா கூட்டணிக்கு வாங்க விஜய்… செல்வப்பெருந்தகை அழைப்பு!

ByP.Kavitha Kumar

Jan 18, 2025

இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் இந்தியா கூட்டணிக்குதான் விஜய் வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
அப்போத அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,,“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என்ற பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ” விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால், இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இந்தியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்” என்று அவர் கூறினார்.