• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு கூட்டம் கூடுகிறது அது வாக்காக மாறுமா?ஓபிஎஸ் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2025

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு:

தற்சமயம் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பிரிந்து போனவர்கள் வருவதை வரவேற்கிறோம் என வைகை செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு:

வங்கி செல்வன் இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்ன பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு அதிகாரம் உள்ளதா.

திருச்சியில் பள்ளியில் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது குறித்த கேள்விக்கு:

அது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன்.

தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு:

தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கு அதற்குள் அவசரப்பட வேண்டாம்.

கூட்டணி குறித்து சி.வி சண்முகம் பேசியது குறித்த கேள்விக்கு:

கூட்டணி சேர வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் யார் நின்றது.

விஜய் பிரச்சாரத்திற்கு அதிக கட்டுப்பாடு விதிப்பது குறித்த கேள்விக்கு:

தேவையில்லாத கட்டுப்பாடுகள்.

டிஎம்கே தான் எதிரி என விஜய் கூறுவதற்கு டிஎம்கே தான் பதில் சொல்ல வேண்டும்.

விஜயுடன் சேருவது வதந்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்.

விஜய்க்கு கூட்டம் கூடுகிறது அதை மறுக்க முடியாது ஆனால் அது வாக்காக மாறுமா என்பதை தேர்தலுக்குப் பிறகு வாக்குகள் பதிவான பிறகு தான் சொல்ல முடியும் என கூறினார்.