மதுரை தெப்பக்குளம் விதைப்பந்துகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதைப்பந்துகள் கொண்டு விஜய் அவர்களது உருவம் வரைந்து திரு.விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விதைப்பந்துகள் பற்றி சாதாரணமாக எடுத்துக் கூறினால் மக்கள் கேட்கும் ஆர்வத்தில் இருப்பதில்லை. அதனால் இது போன்ற பிரபலங்களின் உருவங்களிலோ அல்லது அவர்களின் வாயிலாகவோ அந்த கருத்துக்களை தெரிவித்தால் மக்கள் வெகு ஆர்வமாக கவனிப்பது உண்டு. பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்கும் விதமாகவும் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும் விதைப்பந்துகள் கொண்டு விஜய் அவர்களின் உருவம் வரைந்து வாழ்த்துக்கள் தெரிவித்தும் விதைப்பந்து பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தினேன்.