• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விதார்த்-சுவேதா டோரத்தி நடிக்கும் புதிய படம் ‘லாந்தர்’..!

Byதன பாலன்

Jun 10, 2023

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் தயாரிக்க, சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லாந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


இயக்குநர் சாஜி சலீம் ஏற்கெனவே இயக்குநர் ராம்குமாரிடம் ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் இயக்குநர் செல்லா அய்யாவு உடன் ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திலும் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.


இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த லாந்தர் திரைப்படம் இவர் இயக்கும் இரண்டாவது படமாகும்.இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சாஜிசலீம்,

“இதுவரையிலும் யாரும் சொல்லாத சஸ்பென்ஸ், திரில்லராக உருவாக உள்ளது ‘லாந்தர்’. இந்த புதுமையான கதைக் களத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என் மீதும், கதையின் மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி..” என்றார்.புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது.‘லாந்தர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.