• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனி வாட்ஸப்பிலும் வீடியோ பதிவு செய்யும் வசதி..!

Byவிஷா

Jun 15, 2023

உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பயனர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது வாட்ஸ்அப் கணக்கில் வீடியோ செய்தியை பதிவுசெய்யும் திறன் கொண்ட அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வரைக்கும் வாட்ஸ்அப் செயலியின் வாயிலாக நேரடியாக புகைப்படம் மட்டுமே எடுக்க முடியும். எனினும் தற்போது வாட்ஸ்அப் கணக்கின் வாயிலாக வீடியோ செய்தியையும் பதிவுசெய்யும் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் வாட்ஸ்அப் செயலியின் வாயிலாக எடுக்கப்படும் வீடியோக்களை நேரடியாக மற்ற 3-ம் தரப்பு செயலிகளுக்கு பார்வேர்ட் செய்ய இயலாது. பயனர்கள் இந்த வீடியோக்களை ஸ்கிரீன் ரெக்கார்டிங் வாயிலாக தான் சேமித்துக்கொள்ள முடியும்.