• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வெற்றித் தமிழர் பேரவை மறு சீரமைப்பு கூட்டம்..,

ByKalamegam Viswanathan

May 24, 2025

மதுரை மாவட்ட வெற்றி தமிழர் பேரவை மறு சீரமைப்பு கூட்டம் உலகத் தமிழ் சங்கத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இந்திரா விஜயலட்சுமி தமிழ் தாய் வாழ்த்து பாடினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலராமலிங்கம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சுரேஷ் அறிமுக உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் அபிநாத் சந்திரன் நோக்க உரையாற்றினார். பரமக்குடி ஆசிரியர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இந்த கூட்டத்தில் , கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களாக அவைத் தலைவர் ராஜா கிளைமேக்ஸ், மக்கள் தொடர்பு அதிகாரி வையாபுரி உள்ளிட்ட 60 பேரை அறிமுகப்படுத்தி கவிஞர் வைரமுத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-தமிழுக்காக அந்த மொழியை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்ப்பதற்காக தொடங்கப்பட்டது.

வெற்றி தமிழர் பேரவை தொடங்கும் போது, எனது நட்பு வட்டங்களைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் தான் நிர்வாகிகளாக, உறுப்பினர்களாக இருந்தோம்.
தற்போது தேனி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் தமிழர் வெற்றிப் பேரவையில் உள்ளனர். மதுரையில், 200 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.வெற்றித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவரான நான் இளைஞர் திரு கூட்டத்தை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் இயக்கமும் தங்கள் உறுப்பினர்களை பார்த்து கேட்கத் தயங்கும் ஒரு கேள்வி அந்தக் கேள்வி முற்றிலும் மாறுபட்டது. இந்த சமூகத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீர் வளம் நிலவளம் மலைவளம் அதைவிட சிறந்த வளம் எதுவென்றால் அது வளம் மனித வளம்.அந்த மனித வளம் காக்க எங்கள் வாழ்நாள் முழுவதும் மது புகை இரண்டையும் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறேன். அந்த இரண்டும் உங்கள் அழகை கெடுக்கிறது உங்கள் தோற்றத்தை கெடுக்கிறது.

உடலை கெடுக்கிறது உள்ளத்தை கெடுக்கிறது. மது அருந்தியவனை பெற்ற தாய் மன்னிப்பதில்லை. தாயை விட விருந்து சக்தி இந்த பூமியில் எதுவும் இல்லை. மது அருந்தவில்லை என்றால் மனைவி பிள்ளைகள் உங்களை மதிப் பார் கள். மது அருந்துவர்களுக்கு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இனி வரும் இளைய சமுதாயத்தினரே நீங்கள் மது புகை இரண்டையும் தொடுவதில்லை என்று உறுதி ஏற்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் கல்வி, திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கை தான் வாழ்க்கை.

விமர்சனங்களை கண்டு அஞ்சக் கூடாது. நமது செயல் விமர்சனத்துக்கு ஆளாகிறது என்றால், நாம் வளர்ந்து வருகின்றோம். நம்மை விட இந்த உலகில் சிறந்தவர்கள் உள்ளனர் என்ற கருத்தோடு நாம் பயணிக்க வேண்டும். அப்போது தான் கற்றல் திறன் அதிகரிக்கும். தேடல் அதிகரிக்கும். திருவள்ளுவர் தமிழரின் அடையாளம். சிறந்த ஞானியான அவர், தமது நூலில் அறத்தின் வழியே பொருள் ஈட்ட வேண்டும் என வலியுறுத்துகிறார். அவ்வாறு பெறப்பட்ட பொருளின் வழி இன்பம் பெற வேண்டும்.
இந்த வெற்றி தமிழர் பேரவை மூலம் தமிழுக்கு நம்பிக்கையை உருவாக்குவோம்.

மது அருந்தாத புகை பிடிக்காத இளைஞர்களை உருவாக்கும். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் கண்ணன் கவிஞரின் தாயாரின் உருவப்படத்தை வழங்கினார். வெற்றி தமிழர் பேரவையின் மூத்த நிர்வாகிகள் மணிகண்டன், ஒத்தக்கடை ரவி, எழுத்தாளர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா உள்ளிட்டோருக்கு கவிஞர் வைரமுத்துபொன்னாடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியினை கவிஞர் சந்திரன் தொகுத்து வழங்கினார். இந்திரா விஜயலட்சுமி நாட்டு பண்பாடினார்.முடிவில் சுஜாதா குப்தன் நன்றி கூறினார்.