கிராம கோவில் பூசாரிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் அடைகலம் காத்த அய்யனார் கோவில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக கிராம கோவில் பூசாரிகள் மற்றும் கோடாங்கிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. இதில் செல்லம்பட்டி ஒன்றிய இணை அமைப்பாளர் ராமசாமி பூசாரி தலைமையில் மதுரை மாவட்ட கிழக்கு பொருப்பாளர் பாண்டி முன்னிலையில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர்.

