• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசின் உத்தரவை மதிக்காத வேலூர் மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள்

Byமதன்

Jan 8, 2022

தமிழக அரசு முதல்வரின் உத்தரவை மதிக்காத வேலூர் மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள்? வேலூர் மாவட்ட உட்பட்ட மாநகராட்சிக்கு 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகள் உள்ள நான்காம் மண்டலம் உட்பட்ட வார்டுகளில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.

தமிழக அரசாங்கம் மூலம் இந்த சாலை தரமாக உள்ளதா ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் சாலையை நன்கு நோண்டி சாலை அமைக்க வேண்டும். ஆனால் சாலை அமைப்பதற்கான குத்தகைதாரர்கள் சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் சாலை மேலே சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு விபத்துக்குள் உள்ளாகிறார்கள். இதைப்பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறுகையில் அவர்கள் எங்கள் மண்டலத்துக்கு உட்படவில்லை இது நான்காம் மண்டலம் என்று குறை சொல்லும் பொது மக்களை அவமான வார்த்தைகளும் அவமதித்தும் பேசுகிறார்கள். பொதுமக்கள் பயணம் செல்லும் சாலையில் விபத்துகள் ஏற்படும் வகையில் அமைப்பதை தவிர்த்து கண்டுகொள்ளாத மெத்தனப் போக்குள்ள அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்?