• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

2.79கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் பொற்கொல்லரின் சாதனை..!

Byவிஷா

Dec 25, 2021

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயைத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துக்குமரன் (40). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகைகளை செய்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் 2.கிராம் 790 மில்லி கிராம் தங்கத்தில் , 1.5 இன்ச் நீளமும், 1 இன்ச் உயரம் மற்றும் அகலத்தில் மிகச்சிறய அளவிலான வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்துள்ளார்.


இவர் கடந்த 2020 ஏப்ரலில் 530 மில்லி கிராம் தங்கத்தில் கரோனா வைரஸ் கிருமியால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, முகக்கவசம், இந்தியா வரைபடம் ஆகியவை அடங்கிய குழு செய்தார். மேலும் 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020 ஆண்டு 12 பக்க காலண்டரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டட உருவத்தையும்,120 மில்லிகிராம் தங்கத்தில் ஓட்டு விற்பனை இல்லை என்ற பாதகை 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2018 ஆண்டு புகழ்பெற்ற சவுதியில் உள்ள மெக்கா,மதினா உருவங்களை 640 மில்லி கிராமில் 1 செ.மீட்டர் உயரத்தில் தங்கத்திலும், மேலும் அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.