மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்கும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி தேதி இன்னும் தெரிவிக்காததால் வெயில் மற்றும் மழையிலும் கிடக்கும் அவலம் !!!
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 240 – க்கு மேற்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்குவதற்காக இன்னும் தேதி அறிவிக்கவில்லை என்பதால் இதனை இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. வெயில் மற்றும் மழையில் இந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்து வைக்கப்பட்டு உள்ளது. எனவே வாகனம் பழுதாகுவதற்கு முன் விரைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வெயிலிலும், மழையிலும் வாகனங்கள் நிற்ப்பதினால் விரைந்து பழுதாக கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இதனை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய பிறகு பழுதடைந்தால் அவர்கள் தான் பாதிப்படைவார்கள். இதனால் மக்களின் வரிப் பணம் வீணாவதாக அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.