• Fri. Apr 26th, 2024

நூறு ஆண்டு பழமை வாய்ந்த ராட்சத மரம் விழுந்ததில் வாகனங்கள் நசுங்கி சேதம்

Byகுமார்

Nov 7, 2021

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுரையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக மதுரை சிம்மக்கல், கோரிப்பாளையம், அரசரடி, மாப்பாளையம், பெரியார், தமுக்கம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில் மதுரை மெட்ஜூரா கோட்ஸ் ஒட்டியுள்ள முத்து மேம்பாலத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த பழமையான ராட்சத அரசமரம் தீடீரென இன்று முறிந்து விழுந்தது.

எதிர்பாராத நடந்த இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர்ஆட்டோ நசுங்கியதோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.

நல்வாய்ப்பாக மரம் விழுந்த போது யாரும் வாகனத்தில் செல்லதாதால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. தற்போது தீயணைப்புத்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *