• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு காலிமைதானத்தில் அமர்ந்து கொண்டு வீராப்பு பேசுகின்றார்- சிவகங்கை MLA விமர்சனம்.

ByG.Suresh

Jun 24, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதல்வர் பொருப்பேற்று பதவி விலக கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பேசிய சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை பற்றி பேசுவதை தவிர்க்க, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றி விட்டு காலி மைதானத்தில் அமர்ந்து கொண்டும் ஓடி ஒளியவில்லை என்று வீராப்பு பேசுகின்றார். படிக்கும் பேப்பரை கூட பிடிக்க முடியாமல் கை நடுங்கும் முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு எப்படி அடக்குவார் என கேள்வி எழுப்பினார்.