தமிழக அளவில் விஐபி தொகுதியாக மாறி இருக்கும் தொகுதிகளில் ஒன்று விராலிமலை ஆகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. மூன்று முறையும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

2011 தேர்தலில் விஜயபாஸ்கரிடம் தோல்வியை தழுவியவர் தான் இப்போது கனிமவளத்துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு எஸ்.ரகுபதி. அடுத்து இரண்டு முறையும் விஜயபாஸ்கரிடம் தோல்வியுற்றவர் திமுகவைச் சேர்ந்த தென்னலூர் பழனியப்பன். இந்த முறை அவர் நிற்கிறாரா நின்றால் வெல்வாரா என்பதையெல்லாம் தாண்டி இந்த முறை இதே பாஸ்கரை வென்றே ஆக வேண்டும் என்ற வகையில் திமுக தலைமை பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை இறங்கி வேலை செய்து வருகிறது. இந்த தொகுதியில் குறிப்பிட்ட சகதவிதத்திற்கு மேல் இருக்கும் முத்தரையர் இனத்தை சேர்ந்த வாக்காளர்கள் இருப்பதால் அவர்களும் காலம் காலமாக எம்ஜிஆரின் விசுவாசி, ஜெயலலிதாவின் விசுவாசி என்பதை எல்லாம் தாண்டி விஜயபாஸ்கர் வெற்றி பெற வைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான் என்று பரவலாக பேசப்படுகிறது.

விஜயபாஸ்கரை வெல்வது கடினம் என்று தேர்தலில் களம் காண்பவர்கள் யோசித்துக் கொண்டிருந்தாலும் அண்மையில் புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். அவரது உறவினர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் பரவலாக வேட்பாளர்களை நிறுத்துவது என சசிகலாவும் முடிவு செய்திருந்த வேளையில் தான் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒரு பிரிவாக இருக்கும் அக்கட்சியை உருவாக்கிய ராமதாஸ் அவர்களும் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்.
அந்த இரண்டு கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் முடிவு செய்து விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவரும் வீர முத்தரையர் சங்கம், தேசிய பாட்டாளி கட்சி என்ற கட்சியை உருவாக்கிய நடத்தி வரும் அதன் நிறுவனர் மற்றும் தலைவரான சி கருப்பையா சசிகலா மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். சசிகலாவை நேரில் சந்தித்தபோது அவருடன் தேசிய பாட்டாளி கட்சியின் மாநில அவைத் தலைவர் சிங்காரம், மாநில பொதுச் செயலாளர் மேலூர் பாலா, புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமியா மூர்த்தி என்கிற துரை, திருச்சி மாவட்டத் தலைவர் நாராயணன், புதுக்கோட்டை மாநகர பொருளாளர் தங்கவேலு, கிழக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலரும் சசிகலாவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தான் இந்தக் கூட்டணியின் சார்பாக தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனர் கருப்பையா முத்தரையர் விராலிமலை தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இயல்பாகவே விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் வெற்றிக்கு பின்னால் இருப்பது முத்தரையர் இனத்தை சேர்ந்த மக்கள் தான் என்று பரவலான கருத்து இருக்கையில் கருப்பையா விராலிமலை களம் காண்கிறார் என்பது தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே விஜயபாஸ்கருக்கு மாற்றாக திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், தொழிலதிபர் கே.ஆர்.என். போஸ் போன்ற ஆளுமைகளை நிறுத்துவதா? அல்லது முத்தரையர் சமூகத்தில் இருந்து யாரையாவது அங்கு நிறுத்தி இதே பாஸ்கரை வெற்றி பெற வைப்பதா என்று திமுக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மக்களை நம்பியும் ஏற்கனவே இருந்த அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு எதிராக இருந்தவர்கள் இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக மாறி கருப்பையாவிற்காக தீவிரமாக தேர்தல் பணியில் இறங்குகிறார்கள் என்ற தகவல்களும் விராலிமலை வாக்காளர்களை உசுப்பேற்றி இருக்கிறது.




