• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் முதல் ஹீரோ பிரீமியா ஷோரூமை வசந்தி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது…

BySeenu

Sep 18, 2024

ஹீரோ மோட்டோகார்ப் -இன் பிரீமியம் டீலர்ஷிப் பிரீமியா கோவை சுங்கம் பகுதியில் வசந்தி மோட்டார்ஸ் சார்பில் துவங்கபட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் சில உயர்தர மோட்டார் சைக்கிள்களை நவீன மற்றும் பிரம்மாண்ட அமைப்பில் காட்சிப்படுத்துகிறது.

இந்த ஷோரூமை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்தியாவின் விற்பனைத் தலைவர் அசுதோஷ் வர்மா அவர்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மண்டலத் தலைவர் ராமராவ் மற்றும் வசந்தி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.பி.பிரேம் ஆனந்த் ஆகியோருடன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களிடம் பேசிய அசுதோஷ் வர்மா, கோவையில் முதல் பிரீமியா டீலர் ஷிப் இது என்றும், தமிழகத்தில் 4 வது டீலர் ஷிப் என்று தெரிவித்தார்.பிரீமியா டீலர்ஷிப் நவீனமயமாக்கப்பட்ட ஷோரூம்களாக இருக்கும். இங்குள்ள வாகனங்கள் பிரீமியமாக இருக்கும்.

இந்த ஷோரூமில் Vida by Hero (பிரீமியம் EV ஸ்கூட்டர்கள்), கரிஸ்மா XMR, ஹீரோ X Pulse, ஹீரோ மேவ்ரிக் 440 மற்றும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகள் இங்கு இருக்கும். Hero ஹார்லி டேவிட்சன் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் சமீபத்திய ஹார்லி டேவிட்சன் வாகனங்களும் இங்கு இருக்கும், என்று அசுதோஷ் கூறினார்.

வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளை கான்ஃபிகரேட்டரில் பார்த்து, நீங்கள் விரும்பும் பாகங்கள் நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஒரு தயாரிப்பின் தொழில்நுட்பத் திறன்களைப் பற்றி இங்குள்ள வல்லுநர்களிடமிருந்து நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ளலாம். எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் எங்கள் பிரீமியா ஷோ ரூமை பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அவர் கூறினார்.

பிரீமியா ஷோ ரூம் குறித்து வசந்தி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.பி.பிரேம் ஆனந்த் கூறுகையில்..,

ஹீரோவிடமிருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டீலர்ஷிப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது . ஹீரோ மோட்டோகார்ப் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களில் பெரிய அளவில் முன்னேறி வருகிறது, மேலும், இது போன்ற பிரத்யேக விற்பனை நிலையங்களை நாட்டில் பல இடங்களில் உருவாக்கி வருகிறது. இந்த ஷோரூமில் ஹார்லி எக்ஸ்440, ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர், விடா வி1 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய பைக்குகள் விற்பனைக்கு உள்ளது. இன்று புதிதாக முன்பதிவு செய்யப்பட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன என்றார்.

இந்த திறப்பு விழாவில் வசந்தி மோட்டார்ஸ் குழுமத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.