உசிலம்பட்டியில் 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமையில் பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமையில், சிபிஐ, விசிக, ஆதிதமிழர் பேரவை, தமிழ்புலிகள், அதிமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராகவும், மூன்று சட்ட திருத்தங்களுக்கான மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.









