மதுரை கல்லம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சர்வயோகா மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கோவில் ஸ்தாபகர் மற்றும் நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் தலைமையிலும், தலைவர் மகாலிங்கம், உப தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் தாமோதர்ராஜ் (வழக்கறிஞர்), பொருளாளர் பாண்டியன், டிரஸ்டி உறுப்பினர்கள் பாண்டி மீனாள், அனிதா, நாகராஜன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது,

இந்நிகழ்ச்சி கடந்த 25ஆம் தேதி காப்பு கட்டுதலில் தொடங்கி தினம் தோறும் ஒவ்வொரு விதமான அலங்காரம் வாராஹி அம்மனுக்கு செலுத்தப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக நேற்று ஸ்ரீ மஹிஷா சூரமர்த்தினி அலங்காரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது, நேற்று காலை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்தி கடனை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை வீரகுளம் கண்மாயிலிருந்து கரகம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)