• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வரதராஜ் பொறியியல் கல்லூரியின் விளையாட்டு விழா..,

ByK Kaliraj

Mar 14, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் 15 வது (Sports Fiesta-26) விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சாத்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குருசாமி கலந்து கொண்டார்.

மேலும் முக்கிய விருந்தினராக மாநில அளவிலான கபடி போட்டியில் சில்வர் மெடல் வாங்கிய தேசிய பதக்க நாயகி விந்தியா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்

சாத்தூர் டிஎஸ்பி குருசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியது இன்றைய இளைய சமுதாயத்தினர் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும் அப்போதுதான் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய விருந்தினர் விந்தியா பேசியது,
இரண்டு வருடத்தில் மாநில அளவிலான 4 போட்டிகளில் கலந்து கொண்டேன். அதற்காக கடினமாக உழைத்தேன். கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெற முடியும். என தனது வாழ்க்கை பயணத்தை அழகாக எடுத்துரைத்து மாணவர்களுக்கு பல்வேறு ஊக்கமளிக்கும் கருத்துக்களை கூறினார் .

ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் தாளாளர் திருமதி. பிருந்தா ராகவன் அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராகவன், முதல்வர் முனைவர். செல்வ பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் தடகள போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள், வழங்கப்பட்டன.