• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வலைத்தளம் மூலம் கதாநாயகனை தேர்வு செய்யும் வஞ்சம் தீர்தாயடா படக்குழு

4வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது .

சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் பார்வைபோஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அதற்கான விடை நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கிடைத்தது

தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது “ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் .

இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

இயக்குனர் சுசி கணேசன் இதுபற்றி கூறும்போது “பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதா நாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்

ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் . இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி உடற்பயிற்சி அளிக்கப்படும் . மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர் ,
12 வாரங்கள் நடக்கும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ” கலந்து கொளவார்கள் . இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது .
நடிகை ஸ்னேகாவை
பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும் நடிகர் பிரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன் , சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கேற்ப ” வருங்கால சூப்பர் ஹீரோ” வின் மூலம் கதா நாயகன் தேடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்
ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் ” என்றார் சுசி கணேசன் .

தயாரிப்பாளர் மஞ்சரி கூறுகிறபோது “பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும் . இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் சுசி கனேசன் ஈடுபட உள்ளதாக கூறினார் நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் . வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும் என்றார்.