• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலுக்குமுதல் முறையாக வந்தது “வந்தே பாரத் ரயில்”

இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சென்னை முதல் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் கோரிக்கையை ஏற்று இன்று முதல் (ஜனவரி_4)ம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை வந்தேபாரத் ரெயில் நீட்டிக்கப்பட்டது. இந்த இரயில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் வந்த வந்தே பாரத் ரெயிலை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று கொண்டாடினர். பின்னர் விஜய்வசந்த் இரயில் இஞ்சின் ஓட்டுனர், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாவட்டத் தலைவர்கள், முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.

பாஜகவின் சார்பில் முன்னாள் குமரி மக்களவை உறுப்பினர் பொன். இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜகவை சேர்ந்த பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க பல முறை துறை சார்ந்த அமைச்சர், இணை அமைச்சர், உயர் அதிகாரிகள் வரை தொடர்ந்து செய்த இடைவிடாது. குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில், உற்சாக மிகுதியில் விஜய் வசந்தை காங்கிரஸ் தொண்டர்கள் தோளில் சுமந்து ரயில் நிலைய நடைபாதையில் உற்சாக முழக்கம் இட்டவாறு ஊர்வலமாக சென்ற காட்சியை ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதனை அவர்களது கை பேசியில் புகைப்படம் எடுத்ததை காண முடிந்தது.