வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்து, ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் வரும் 11-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர உள்ள திரைப்படம் தான் “வான் மூன்று”.
இப்படத்தில் டெல்லி கணேஷ், லீலா தாம்சன், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிறார் ஆதித்யா. அதே நேரத்தில் காதலன் தன்னை விட்டுச் சென்று விட்டதாகக் கூறி, அம்மு அபிராமியும் விஷம் அருந்தி அதே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிறார்.
இவர்கள் இருவரும் எதிரெதிர் பெட்டில் இருக்கின்றனர். அப்போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இது இளம் தலைமுறையின் காதலாக வருகிறது.
தனது தந்தையை விட்டு காதலித்தவனை கரம் பிடிக்கிறார் அபிராமி வெங்கடாசலம். தனது மனைவியை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார் வினோத் கிஷன். இந்நிலையில் அபிராமிக்கு மூளையில் ஒரு கட்டி மூலம் மிகப்பெரிய துயரத்தை சந்திக்கின்றனர் இளம் தம்பதியினர். இது நடுத்தர வயது காதலை காண்பிக்கின்றனர்.
மகன் விட்டுச் சென்று விட, உனக்கு நான் எனக்கு நீ என்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் 60வயதை கடந்த டெல்லி கணேஷ் மற்றும் லீலா தம்பதியினர்.
லீலாவிற்கு இதய கோளாறு ஏற்பட ஆப்ரேஷனுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் டெல்லி கணேஷ். அப்போது இருவருக்கும் உள்ள அனுபவ காதலை காட்டியியுள்ளனர்.
இந்த மூன்று தலைமுறைகளும் தங்களுக்கான காதல் உலகில் எப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்பதை சொல்வதே படத்தின் கதை
ஒவ்வொரு காதலிலும் ஒருவிதமான ஈர்ப்பைக் கொடுத்து மிக அதிகமாகவே கவனம் பெற வைத்துவிட்டார் இயக்குனர். ஆதித்யாவிடம் முதியவர் ஒருவர் கூறும் காதல் வசனங்கள், மிகவும் யதார்த்தமாக உள்ளது.
கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது நடிப்பால் காட்சிகளுக்கு காட்சி சிறப்பு சேர்த்துள்ளனர். ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் வான் மூன்று திரைப்படம் மூன்று தலைமுறை காதலை அழகாக சொல்லியிருக்கிறது.