• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்து…

ByKalamegam Viswanathan

Jul 13, 2026

திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ். வேன் ஓட்டுநர். இவர் திருமங்கலத்தில் உள்ள சிமெண்ட் கடை வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை திருமங்கலம் கடையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் விமான நிலையம் சாலை வழியாக விடத்தக்குளம் சென்றார். ரயில்வே கிராசிங் அருகே உள்ள பாலத்தில் வேன் மேலே ஏறி சென்று திரும்பிய போதுஎதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.

அலெக்ஸ் மற்றும் வேனில் வந்த ஒருவர் படுகாயம்அடைந்தார்கள் ம வேணில் ஏற்றி வந்த சிமெண்ட் மூடைகள் பாலம் முழுவதும் சிதறி கிடந்தன. இதனால் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துகாயமடைந்த இரண்டு பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து விபத்து நடைபெற்ற வேனைமீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.