மதுரை சுற்றுச்சாலை மண்டேலா நகரில் அமைந்துள்ள வல்லமை அறக்கட்டளை சார்பில் கிராமப்புற பெண்கள் மற்றும் மாணவர்கள் பொருளாதார ரீதியாகவும், அரசு வேலை வாய்ப்புகளில் தேர்வு பெற்று முன்னற்றமடைய வழிகாட்டும் வல்லமை அமைப்பு செயல்படுகிறது.

பெண்களால் உருவாக்கி கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பில்நடத்தப்படும் சிறப்பு தேர்வு மையங்களில் மூலமாக சுமார் 600 க்கும் மேற்பட்டோர் அரசு வேலைகளில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக தமிழக முழுவதும் உள்ள நலிவடைந்த பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பயனடைந்து அரசுகளில் சேர்ந்து உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது .
வல்லமை அறக்கட்டளையின் நிர்வாகிகள் உமாதேவி ஸ்டாலின், வள்ளியம்மை ராமையா, அச்சிதா உதயகுமார் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர்.
இது குறித்து வல்லமை அறங்காவலர்களில் ஒருவரான உமாதேவி கூறுகையில் இந்த அமைப்பு நான்கு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமப்புற மாணவ மாணவிகளை தேர்வு செய்து காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு செய்து பயிற்சி மையம் மூலம் காவலர் பயிற்ச்சி வழங்கப்படுகிறது.

இதற்காக காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் பல்வேறு பயிற்சியில் வெற்றி பெற்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரிகளில் தேர்வு பெற்று பணம் கட்ட இயலாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வல்லமை அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் மருத்துவ உபகரணங்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமக்கப்படுபவர்களுக்கு வல்லமை அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அரசு சார்பில் காவலர் தினம் கடைபிடிக்கப்படுவதால் காவலர்களை போற்றும் விதமாக காவலர் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாழ்துக்களை கூறி பயிற்சியுடன் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
வல்லமை (பெண்கள்) அறக்கட்டளை சார்பில் கிராமப்புற நலிவடைந்த மாணவர்களை தேர்வு செய்து காவலர் சிறப்பு ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி அளித்து உற்சாகப்படுத்தும் பெண்களை போற்றுவோமாக.