• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு

ByKalamegam Viswanathan

Sep 30, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த தின விழாவை முன்னிட்டு நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா நடந்தது. இவ்விழாவில் மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தில் இருந்து வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள் பாலா ராஜேந்திரன் பசும்பொன்மாறன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன் நகர இளைஞரணி அமைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவை தலைவர் தீர்த்தம் ராமன் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர்கள் சோழவந்தான் எஸ் எஸ் கேஜெயராமன் வாடிப்பட்டி பால்பாண்டியன் ஆகியோர் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வாடிப்பட்டி கார்த்திக் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் முத்துசெல்வி சதீஷ்குமார் நிஷா கௌதமராஜா சிவா ஆகியோர் பரிசு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆணையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில்வேல் மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி சுரேஷ், மாணவரணி எஸ். ஆர்.சரவணன் சங்கங்கோட்டை ரவி சந்திரன் மாரிமுத்து முள்ளிப் பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா இளைஞர் அணி கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமயநல்லூர் டி எஸ் பி ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்பட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். கால்நடை மருத்து குழு வட மாடு மஞ்சு விரட்டு விழாவில் பங்கேற்ற காளைகளை பரிசோதித்தனர். மருத்துகுழு காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.