தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் மட்டுமே வெளிவந்து வந்த நிலையில், வட மஞ்சுவிரட்டு என்ற புதிய வகை மாடுபிடி வீர விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, படப்பிடிப்பின் போது காளை முட்டி காயமடைந்து வைரலான கதாநாயகன் அசோக்குமார் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது. படக்குழுவினர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை பழனிச்சாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் உருவாகும் ‘வட மஞ்சுவிரட்டு’ படத்தில் ‘முருகா’, ‘கோழிக்கு’, ‘ஆர் யூ ஓகே பேபி’, ‘மாயத்திரை’ உள்ளிட்ட படங்களில் நடித்த அசோக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். புதுமுகம் யாழினி கதாநாயகியாகவும், ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அஞ்சு வழி பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனிடையே, காளை முட்டியதில் அசோக்குமார் காயமடைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
படக்குழு பேட்டி:
கதாநாயகன் அசோக்குமார்: “தமிழ் திரைப்படங்களில் மஞ்சுவிரட்டு குறித்த படங்கள் மட்டுமே இதுவரை வெளிவந்தன. ஆனால், மஞ்சுவிரட்டில் பல ரகங்கள் உள்ளன என்பதை இப்படத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பின் போது என்னுடன் நடித்த ‘பட்டாணி’ என்ற காளை என்னை முட்டி தாக்கியது. காளை முட்டியது என் நண்பனே என்னை முட்டியது போல் ஒரு உணர்வு வந்தது” என்றார்.
படக்குழுவினர் மற்ற உறுப்பினர்களும் படத்தின் தனித்தன்மை குறித்து உற்சாகத்துடன் பேசினர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.













; ?>)
; ?>)
; ?>)