• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி! – அமைச்சர் மா.சுப்ரமணியன்

பள்ளி மாணவர்களுக்கு, அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து, தொற்று பரவலை தடுக்க, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமிக்ரான் தொற்று பரவலை அடுத்து சென்னையில் 3 இடங்களில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 500 படுக்கைகள் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்” என்றார் .

தொடர்ந்து பேசிய அவர், “15 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3 ஆம் தேதி போரூர் பகுதியில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.’ என்றார்.