• Fri. Apr 26th, 2024

தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு தரப்பில், வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் அடங்கிய பையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அச்சிட்ப்பட்டிருந்ததது சர்ச்சைக்குள்ளானது.


இதற்கு பல தரப்பினர் எதிப்பு தெரிவித்தை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகம் நீக்கப்பட்டு, தற்போது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.


உலக தமிழர்கள் அனைவரும் ஆண்டின் முதல் நாளாக சித்திரை 1-ஐ தமிழ் புத்தாண்டாகவும், தை 1-ஐ தமிழர் திருநாளான பொங்கல் திருநாளாக கொண்டடி வருகின்றனர். பழங்காலம் முதல் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட வரும் இந்த நிகழ்வை மாற்றியமைக்கும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக, அரசின் முதல்வர் கருணாநிதி தை 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்து புதிய சட்டத்தை இயற்றினார். அதன்பிறகு தமிழ் புத்தாண்டு தை 1-ந் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவத்தாலும் அப்போதைய திமுக அரசு இதில் மாற்றம் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1-ந் தேதிக்கு மாற்றி புதிய சட்டத்தை இயற்றினார். அதிமுக அரசு சட்டத்தை நீக்கினாலும், திமுகவினர் தை- 1-ந் தேதியை தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி வந்தனர்.


இந்நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழ் புததாண்டு தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுமோ என்ற அச்சம் மக்களிடம் தொற்றிக்கொண்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தை 1-ந் தேதியை தமிழ்புத்தாண்டாக அறிவிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதை அறிந்த பல தரப்பினரும், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். அதன்பிறகு இது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் தற்போது பொங்கல் பரிசு ரூபத்தில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்துளளது. ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜனவரி 3-ந் தேதி முதல் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் பை வெளியிடப்பட்டது. இந்த பையில் தமிழக அரசின் முத்திரையுடன் தமிழ் புத்தாண்டு பொங்கல் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் திமுக அரசு மீண்டும் தமிழ் புத்தாண்டை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பொஙகல் பரிசு பையில் இடம்பெற்ற வாசகங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழபுத்தாண்டு தினத்தை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்வதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகினறனர். தமிழக அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விரைவில் இதனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில், தற்போது பொங்கல் பரிசு வழங்கப்படும் பையில் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ் புத்தாண்டு என்ற வாசகத்தை நீக்கி, தமிழ்ர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள பையில் இருபுறமும் தமிழக அரசின் முத்திரையுடன், ஒருபுறம் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடும் படம் அச்சிடப்பட்டுள்ளது. மறுபுறம், தமிழர் திருநாள் என்ற வாசகத்துடன் மண் செழிக்கட்டும் மக்கள் மகிழட்டும் நீடு நிறையட்டும் நாடு சிறக்கப்பட்டும் என்ற வாசகம் குறிபபிடப்பட்டுள்ளது.


தமிழ் புத்தாண்டு என்ற வாசகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதை மாற்றிய தமிழக அரசுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறனர். மேலும் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பெரிய சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளதாகவும் கூறி வருகினறனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *